Pages

மக்களுக்காக தன்னையே தந்த மன்னன்!-தேவாரம் சொல்லும் ரகசியம்!

தமிழர்கள் கொண்டாடிய திருவோணம்: தேவாரம் சொல்லும் ரகசியம்!

மலையாளம் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத பண்டிகை திருவோணம். ஆனால் சங்க காலத்தில் தமிழர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது சுவராஸ்யமான செய்தி.

தற்போது ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது ஓணம். ஆனால் நம் சங்க கால தமிழர்கள்  ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடினர். இதுகுறித்து சங்ககால ஏடுகளில் விஷ்ணு வின் பிறந்தநாளும், வாமனன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்,
“பரம்பரையாகத் திருமாலுக்கு
தொண்டுசெய்வதையும்
திருவோண நன்னாளில் நரசிம்ம
அவதாரமெடுத்து இரணியனை
அழித்தவனை நம் துன்பங்கள் போகப்
பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே” - (பெரியாழ்வார்திருமொழி 6 ).

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

இன்று அத்திருவிழா தென்தமிழகத்திலும், கோவில்களோடும் நின்றுவிட்டது. கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பத்து நாட்கள் கொண்டாடப்படும்போது,  கேரளாவே பூக்களால் போர்த்தியதுபோல் காட்சியளிக்கும். கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாபலியை சோதிக்கும் வகையில், மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து, மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு மகாபலி சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக
எழுந்து உலகை இரண்டு் அடி அளந்தார்.மூன்றாவது அடியையும் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி, தனது வாக்கின் படி மூன்றாவது அடிக்கு  தனது தலையைக் கொடுத்துள்ளார்.

அப்போது, " உனது தலையை அளந்தால்.. நீ இறந்துவிடுவாயே!" என்ற மகாவிஷ்ணு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று மகாபலியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மகாபலி, "ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில், நான் இந்த நாட்டு மக்களைச் சந்திக்க வருவதற்கு  வரம் வேண்டும்!" என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணு,  மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு, மகாபலி தலையை மூன்றாவதாக அளந்ததாகவும், பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்க வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும், விதவிதமான பூக்களிலாலான பூக்கோலம் இடுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். மகாபலி மன்னன் தங்களை காண வருவதாக நம்பிக்கைக் கொண்ட மக்கள், மன்னனை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பது மக்களின் வழக்கம்.

சாதி, மத, பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுவதால் இந்த பத்து நாளும் திருவோணம் திருவிழாவாக நடக்கும். ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் நேரியல் என்கிற புடவையிலும் அப்போது வலம் வருவார்கள்.

திருவோணத்தை வரவேற்க வித விதமான உணவுகள், விருந்துகள் என கேரளாவும், குமரி மாவட்டமும் களைக்கட்ட தொடங்கிவிட்டன.

சென்னையில் களரி தமிழர்களின் பாரம்பரியக்கலை எனப்பரைசாறுமுகமாக சிலை வைத்துள்ளார்கள்.சங்க கால நூல்களில் இது பற்றிய குறிப்புகளுண்டு. ஆனால் அதனை யாரும் பயில வேண்டுமானால் கேரளாவுக்குத்தான் செல்ல வேண்டும். ஓணமும் இவ்வாறே.பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் கேரளாவே கொடிகட்டிப்பறக்கின்றது. இன்னும் சில காலம் கழிந்து வேட்டி அணிந்து சென்னையில் யாராவது இளைஞர்கள் உலவினால் அவர்களை மலையாளி எனக்கூறும் காலமும் வரலாம்.
சங்க காலத்தில் மட்டும் அல்ல மொழிவாரியாக மாநிலம் பிரிக்காத வரை தமிழன்,மலையாளி,தெலுங்கன்,கன்னடர் அனைவரும் சேர்ந்து அனைத்து பண்டிகைகளும் கொண்டாடினோம். அந்தநாள் மீண்டும் வருமோ???


பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    நாராயண சதுர்வேதி மங்கலம்
ஊர்    :    திருப்பாற்கடல்
மாவட்டம்    :    வேலூர்
மாநிலம்    :    தமிழ்நாடு
திருவோண நட்சத்திர தலம்: 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார்.